Taqwan moskeija - TURKU
5x prayer, courses time and eid time during open.
اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காயிமா ஆதி முஹம்மதன் அல்வஸீலத வல் ஃபைளீலத, வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு (இன்னக லா துக்லிஃபுல் மீஆத்). போருள்: நிறைவான இவ்வழைப்பு மற்றும் நிலை பெற்று விட்ட தொழுகையின் இரட்சகனே! முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வஸீலா (சுவனத்தில் உள்ள உயர்பதவி) மற்றும் சிறப்பை நல்குவாயாக! நீ வாக்களித்துள்ளாயே அத்தகைய (போற்றுதலுக்குரிய இடமான) மகாமம் மஹ்மூதாவில் அவர்களை எழுப்புவாயாக!
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ
அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: பாங்கு மற்றும் இகாமதுக்கும் இடையே உள்ள அழைப்புகள் மறுக்கப்படுவதில்லை.
நபி (ஸல்) கூறினார்கள்: “யாராவது வுழூவை அழகாக செய்து விட்டு, பிறகு ஜும்ஆவுக்கு வந்து, மொளனமாக இருந்து, காது தாழ்த்தி கேட்டால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட நாட்களினதும், மேலும் மூன்று நாட்களினதும் பாவம் மன்னிக்கப்படும்” (முஸ்லிம்)
5x prayer, courses time and eid time during open.