أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله
اللّهُـمَّ أَنْـتَ السَّلامُ ، وَمِـنْكَ السَّلام ، تَبارَكْتَ يا ذا الجَـلالِ وَالإِكْـرام
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
سُـبْحانَ اللهِ، والحَمْـدُ لله، واللهُ أكْـبَر 33 مرة
لا إِلَٰهَ إلاّ اللّهُ وَحْـدَهُ لا شريكَ لهُ، لهُ الملكُ ولهُ الحَمْد، وهُوَ على كُلّ شَيءٍ قَـدير
"இந்த பள்ளியில் தங்கும் காலமெல்லாம் அல்லாஹ்வுக்காக நான் சுன்னத்தான இஃதிகாஃப் இருப்பதை நிய்யத்து செய்து விட்டேன்."
ஜும்ஆ தொழுகை
நம்பிக்கையாளர்களே! "வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூற நீங்கள் விரைந்து செல்லுங்கள்." அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே நன்று (62-9)"
குர்ஆன் & தொழுகை
எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்.(குர்ஆன் : 35:29)
குர்ஆனின் நற்செய்தி
நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
(அல்குர்ஆன் : 17:9)
சுவர்க்கத்தில் நமக்கான இடம்
*"பள்ளிவாசலுக்கு ஒருவர், காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும், மாலையிலும், செல்லும் போதெல்லாம், சுவர்க்கத்தில், அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.“*